நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேசியப் பட்டியல் ஆசன எண்ணிக்கையை தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
29 தேசியப் பட்டியல் ஆசனங்களில் கட்சிகளுக்கு இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு 13 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதனுடன் சேர்த்து அக்கட்சிக்கு கிடைத்துள்ள மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 12 போனஸ் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதனுடன் இக்கட்சியின் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 2 தேசியப் பட்டியல் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, அக்கட்சியின் மொத்த ஆசனங்களில் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், மக்கள் விடுதலை முன்னணிக்கும் 2 தேசியப் பட்டியல் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, அக்கட்சியின் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 06 ஆக அதிகரித்துள்ளது.
