தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் 14ம் திகதியோடு நிறுத்தப்பட வேண்டும் எனும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தனது வழமையான பாணியில் தன்சல் நடாத்துவதாகக் கூறி பெருமளவு பெண்களை ஒன்று கூட்டி அவர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கியுள்ளார் மஹிந்த ராஜபக்ச.
நேற்றைய தினம் இடம்பெற்ற இந்நிகழ்வு பற்றி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் ஸ்தலத்திற்கு பொலிசார் விஜயம் செய்து குறித்த நிகழ்வை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்நிகழ்வில் 300 பெண்கள் கலந்து கொண்டுள்ளதோடு அவர்களுக்கான அன்பளிப்புகளும் வழங்கப்பட ஏற்பாடாகியிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
