இலங்கையின் பாராளுமன்றத்திற்கு பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் 2015.01.08 ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றம், கடந்த அரசாங்கத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள், சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதியின் அண்மைக்கால செயற்பாடுகள், முன்னால் ஜனாதிபதியின் மீள் அரசியல் பிரவேசம், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அமைந்த தேசிய அரசாங்கத்தின் அணுகு முறைகள், சிறுபான்மை மக்களின் அதிருப்தி மற்றும் எதிர்கால தேவைப்பாடுகள் குறித்த பிரதான கட்சிகளின் நிலைப்பாடு, சிறுபான்மை இனத்தவர்களின் தீர்வு திட்டத்தை மையப்படுத்திய பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் வாக்களர்களின் மனநிலை, கடந்த கால தேர்தல் முடிவுகள் போன்றவற்றை மையப்படுத்தி இவ் எதிர்பார்க்கை கணிப்பீடு பிரதிபலிக்கின்றது.
மேல் எதிர்வு கூறப்பட்டுள்ள கருத்துக் கணிப்பீட்டின் அடிப்படையில் கொழும்பு, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, திருக்கோணமலை, புத்தளம், பதுளை, கேகாலை போன்ற 10 மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சி முன்னிலை பெறக்கூடிய நிலை காணப்படுவதுடன், கம்பஹா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை குருணாகல், அனுராதபுரம், பொலநறுவை, மொனராகலை, இரத்தினபுரி ஆகிய 09 மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், மட்டக்களப்பு, வன்னி, யாழ் ஆகிய 03 மாவட்டங்களில் தமிழரசுக்கட்சி முன்னிலை பெற சந்தர்பமுண்டு- திகாமடுல்ல மாவட்டத்தில் ஆசன கணிப்பீட்டுக்கான வாக்கானது குறைவடையும் போது ஐக்கிய தேசிய கட்சிக்கு 04 ஆசனங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதுடன் அவ்வாறில்லாமல் ஆசன கணிப்பீட்டுக்கான வாக்கானது கூடுமாக இருந்தால் அவ் நான்காவது ஆசனம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு செல்லும் வாய்ப்புள்ளது. உதாரணமாக,
- UNP 120000 வாக்கினையும், ACMC 28000 வாக்கினையும் பெறுமாக இருந்தால் அளிக்ககப்படவுள்ள வாக்கு எண்ணிக்கையிலிருந்து ஆசன பங்கீட்டுக்கான 5% வெட்டுப்புள்ளி கழித்து வருகின்ற தொகை 50000 ஆக காணப்படுமிடத்து UNP க்கு 100000 வாக்குக்கு 02 ஆசனங்களும், மீதமாக உள்ள வாக்கு 20000 ஆக இருக்குமாயின் அவ் ஆசனம் ACMC 28000 வாக்கினை அல்லது 20001 வாக்கினை கூடுதலாக பெறுமாயின் ACMC 01ஆசனத்தை இலகுவாக பெற்றுக் கொள்ளும் அத்துடன் ஆசன பங்கீட்டுக்காக தொகை 45000 ஆக இருப்பின் 90000 வாக்குகளுக்கு 02 ஆசனமும் மீதமுள்ள 30000 வாக்கு ACMC யினை விட கூடுதலாக இருப்பின் அது UNP க்கு போனஸ் ஆசனத்தோடு 04 ஆசனங்களையும் பெற வாய்ப்புள்ளது.
- மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் 04 ஆம், 05 ஆம் ஆசனங்களுக்கான போட்டி மிகவும் பலமாக இருக்கும் என்பதுடன் இப்போட்டியானது UNP, UPFA, SLMC ஆகிய கட்சிகளிடையே இடம்பெறுமாகையால் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னுடைய பலத்தை வெளிப்படுத்த இக்கட்டான நிலைக்கு தள்ளப்படலாம்.
- வன்னி மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி 04 ஆசனங்கள் பெறுமாயின் UNP ஆனது தனது முதலாவது ஆசனம் போக இரண்டாவது ஆசனத்திற்கான வாக்கு மிகுதி ளுடுஆஊ யின் யினை விட குறையுமிடத்து UNPக்கு 01 ஆசனம் கிடைக்க நேரிடலாம்.
தொகுப்புMSMB
