ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையில் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று கைச்சாத்திடப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அதன் பொதுச் செயலாளர் கபீர் ஹசீமும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அதன் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயகவும் இவ் உடன்படிக்கையை கைசாத்திட்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுதந்திர இலங்கையின் 22 ஆவது பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறுகின்றது. இதன் போது இந்த உடன்படிக்கை கைசாத்திட்டப்பட்டது.
