"ஓபாமா வந்தாலும் ரணிலை காப்பாற்ற முடியாது "

“பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் வந்திருக்கின்றார். விடுமுறையை கழிப்பதற்காக வந்திருந்தால், நுவரெலியாவுக்கு போகலாம், கடற்கரைக்கு போகலாம் ஆனால், யாழ்ப்பாணத்துக்கு ஏன் போகவேண்டும்” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, குருநாகலில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் கேள்வி எழுப்பினார்.

“அவர், யாழ்ப்பாணத்துக்கு சென்றிருக்கின்றார். புதைக்கப்பட்டுள்ள புலிகளை உசுப்புவதற்கே அவர் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளார். டொனி பிளேயர் அல்ல, அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா வந்தாலும் ரணிலை காப்பாற்ற முடியாது” என்று விமல் மேலும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -