எதிர்வரும் 17 ஆம் திகதி தெரிவு செய்யப்படும் பாராளுமன்றத்துக்கான புதிய உறுப்பினர்கள் அனைவரினதும் தகவல்களைக் காட்சிப்படுத்தும் அறிவித்தல் பலகையொன்று எதிர்வரும் 23, 24, 25 ஆம் திகதிகளில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் திறந்து வைக்கப்படும் என பாராளுமன்றச் செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். புதிய உறுப்பினர்களுக்குத் தேவையான பாராளுமன்றம் தொடர்பிலான சகல தகவல்களும் அன்றைய தினம் வழங்கப்படும்.
புதிய பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கான ஆள் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் நடவடிக்கையும் அன்றைய தினம் இடம்பெறும் எனவும் செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
