சங்கக்காரவுக்கு கௌரவமான பிரியாவிடை வழங்க பிரதமர் தீர்மானம்!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ள நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சங்கக்காரவுக்கு கௌரவமான பிரியாவிடை வழங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இதன் பிரகாரம் பி.சரவணமுத்து மைதானத்தில் நடைபெறும் இந்திய - இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியை கண்டுகளிக்க நாளை வருகை தரவுள்ளார். பின்னர் பிரதமரின் தலைமையில் சங்க்காரவுக்கு கௌரவமான பிரியாவிடை அளிக்கப்படவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சங்கக்கார இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 12, 400 ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில் 14, 234 ஓட்டங்களும், இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் 1,382 ஓட்டங்களும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த நிலையில் விடைபெற எதிர்பார்த்திருந்த சங்கக்காரவின் கனவு நிறைவேறவில்லை. இரண்டாவது இன்னிங்சில் வெறும் 18 ஓட்டங்களுடன் அவர் ஆட்டமிழந்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -