ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளரும், ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள முஜீபுர் றஹ்மானுக்கு எதிர்வரும் 24ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தல் பிரசாரத்தின் போது தேர்தல் சட்டங்களை மீறினார் என இவர் மீது பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்ததாகவும் அது தொடர்பிலான விசாரணைகளுக்காகவே நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் முஜிபுர் ரஹ்மானுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
