இந்தியாவின் 69வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி சுதந்திர தின உரையை நிகழ்த்தவுள்ளார்.
அங்கு பாதுகாப்பு அணிவகுப்புகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை சுதந்திர தின நிகழ்வுக்களுக்கான பாதுகாப்புகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக இந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்த எச்சரிக்கை அதிகரித்துள்ளது.
எல்லைப் பகுதியிலும் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் அதிக அளவான பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


