ஓட்டமாவடி பிறைந்துரைச்சேனை பகுதியைச் சேர்ந்த முகம்மட் அமீன் (37 வயது) என்பவர் இன்று காலை துப்பாக்கிச்ச்சூட்டுக்கிலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் அவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இனம் தெரியாத இளைஞர் ஒருவர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், துப்பாக்கிதாரியை கைது செய்யும் பொருட்டு பொலிஸார் பொது மக்களின் உதவியையும் நாடியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளாது. இச்சம்பவத்தின் பின்னணி தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
