அமைச்சரவையை 30ஆக வரையறுப்பதற்கு தீர்மானம் : திங்கள் பதவியேற்பு (?)

புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையை 30ஆக வரையறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. 

இதன் பிரகாரம், ஐக்கிய தேசிய மக்கள் முன்னணியிலிருந்து 16 பேரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து 14 பேரும் அமைச்சரவை அமைச்சர்களாக அங்கம் வகிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு, அமைச்சரவை அந்தஸ்தற்ற இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் 45 பேரும் நியமிக்கப்படும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

இதனிடையே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவையை தேர்வு செய்யும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. வரும் வாரமளவில் அமைச்சரவை பதவியேற்கும் என்று தெரிகிறது.

இதேவேளை, இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைக்கும் தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 24ம் திகதி பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வர்.

ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சர் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதுடன் முன்னாள் அமைச்சர்கள் பலரின் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணைப்பு 2 - 50 அமைச்சு.

ஐக்கிய தேசிய கட்சிக்கும் சுதந்திர கூட்டமைப்புக்கும் இடையில் நேற்றும் இன்றும் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் அமையப்போகும் தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் 33 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கவும் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த 17 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவிகள் வழங்க உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சுதந்திர கூட்டமைப்பு இன்னும் இரண்டு மேலதிக அமைச்சரவை அமைச்சு பதவிகளை கோரியுள்ளதாகவும் அதனை வழங்க ஐக்கிய தேசிய கட்சி உடன்பட்டால் 52 பேர் அடங்கிய அமைச்சரவை அமையும் வாய்புகள் அதிகம் உள்ளதாகவும் இலங்கை அரசியலில் உள்ள சிரேஷ்ட உயர்மட்ட அரசியல் பிரமுகர் ஒருவர்  தெரிவித்தார்.

பத்தொன்பாதாவது அரசியல் அமைப்பின் பிரகாரம் ஒரு கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில் அமைச்சரவை முப்பதுக்கு அதிகமாக இருக்கமுடியாது ஆனால் தேசிய அரசாங்கம் அமையும் பட்சத்தில் அதனை அதிகரித்துக்கொள்ள முடியும் என குறிப்பிட்ட அவர் …

ஐக்கிய தேசிய கட்சி சார்பாக மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹசீம் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக அனுரா யப்பா,துமிந்த திசாநாயக்க , ஜோன் செனவிரத்ன உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இடையே நேற்றும் இன்றும் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் ஹரின் பெர்னாண்டோ, மலிக் சமரவிக்ரம, சாகல ரத்நாயக்க, வஜிர அபேவர்தன, ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ள பட்டியலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக புதிதாக இடம்பிடிப்பவர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்….

யாருக்கு என்ன அமைச்சு பதவிகள் வழங்குவது என்பது தொடர்பாக இன்னும் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என குறிப்பிட்ட அவர் கடந்த நல்லட்சி அரசில் வழங்கப்பட்ட அமைச்சு பதிவிகளில் மாற்றங்கள் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைக்கும் தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் பதவிப் பிரமாணம் எதிர்வரும் 24ம் திகதி இடம்பெறும் அவர் மேலும் குறிப்பிட்டார்.#மடவல
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -