மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியாது - சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சூழ்நிலையிலும் மஹிந்த ராஜபக்ஸ, பாராளுமன்றின் எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்கப்படக்கூடிய சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இளைய பிரபல்யமான ஒருவரை எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்க வேண்டுமென தாமும் ஜனாதிபதியும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கட்சியை அழிவடையச் செய்ய மஹிந்தவிற்கு இடமளிக்க வேண்டாம் என அவர் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களிடம் கோரியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -