இ.அம்மார்-
குருநாகல் மாவட்டத்தில் பொதுத் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்பாளர்களுடைய பெயர் பட்டியலில் சஹாப்தீன் முஹமட் சாபி என்பவருடைய பெயர் இடம்பெற்றிருந்து அதேவேளை இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் இடம்பெறவில்லை.
மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சில சிறு கட்சிகளில் சில முஸ்லிம் வேட்பாளுடைய பெயர்கள் இடம்பெற்றிருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இம்மாவட்டத்தில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷாவும் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடவுள்ளார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆனால் அவருடைய பெயர் வேட்பாளர் பெயர் பட்டியில் இடம்பெறவில்லை.
அந்தவகையில் இது தொடர்பாக அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது தான் வேட்பு மனுவில் 18 வதாக கையொப்பமிட்டதாகவும் ஆனால் தன்னுடைய பெயர் இடம்பெறவில்லை எனவும் கையொப்பிட்டது தொடர்பான நிழல் படம் தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இம்முறை குருநாகல் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் முஸ்லிம் வேட்பாளர் நிறுத்தவில்லை என்ற காரணத்தினாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றார் என்ற வகையிலும் கணிசமான முஸ்லிம் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்குச் செல்லக் கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளன.
ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கார ஆதரவாளர்கள் அதிதீவிரமாகச் யற்படுவதற்கு ஐக்கிய கட்சியைச் சார்ந்த ஒரு பிரதிநிதி இம்மாவட்டத்தில் நிறுத்தப்பட வில்லை என்ற ஆதங்கத்துடன் இருக்கின்றனர்.
இம்மாவட்ட அமைப்பாளர் சஹாப்தீன் ஐக்கிய தேசியக் கட்சிக்காக பெரும் பாடுபட்டுள்ளார். பல கோடிக்கான பணத்தை இந்தக் கட்சிக்காகவும் மக்களுக்காகவும் செலவு செய்துள்ளார். அதேபோல இந்தப் பகுதியில் பலமிக்க மக்கள் பிரதிநிதி வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷாவும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்யியில் போட்டியிட்டு சுமார் 25000 வாக்குகளைப் பெற்றவர்.
இவருக்கு போட்டியிட சந்தர்ப்பம் வழங்கவில்லை என்ற காரணத்தினால் தற்போது இவருடைய ஆதரவாளர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதவாளர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் குருநாகல் மாவட்ட முஸ்லிம் மக்களுடைய வாக்குகள் குறிப்பாக சிதறுண்டு போகும் ஆபத்தான நிலையை தற்போது எதிர்நோக்கியுள்ளது.
தற்போது களமிறங்கியுள்ள வேட்பாளர் சாபி ஒரு புதுமுகம். இம்மாவட்டத்தில் விரக்தியுற்ற நிலையிலுள்ள ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதவாளர்களையும் எந்தளவு கவர்ந்திழுக்க முடியுமோ அப்பொழுதான் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது.
இம்மாவட்டத்தில் நினைத்தபடி ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. பலத்த போட்டியை சந்திக்க நேரிடும் என்பது தற்போது சூடுபித்துள்ள அரசியல் களநிலவரம் தெரிவிக்கின்றது.
