ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்பு மனு வழங்கப்பட்டால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் என அவரது செயலாளர் பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்பு மனு வழங்கப்பட்டால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கட்டாயம் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவார் என அவர் அத தெரணவிடம் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு பிரதமர் வேட்பாளர் கேட்கும் உரிமை உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
