முகம்மட் முபீர்-
முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி முழு பூசணிக்காயும் சோற்றில் மறைக்க முயல்கிறார் ரியாஸ் சாலி குற்றச்சாட்டு
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முக்கியஸ்தர்களின் ரே டேனியல் தவல் மிகேல் நாடகத்தை கண்டித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கலம்பு மாவட்ட அமைப்பாளர் ரியாஸ் சாலி விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .
அவர் மேலும் கூறுகையில்;
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின்போது சிறுபான்மை மக்களின் பொது எதிரியான மகிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பும் பொது நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே சிறுபான்மை மக்களின் ஆதரவு மற்றும் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு பொது வேட்பாளர் மைத்ரி பால சிறிசேனவுக்கு கிடைத்தது.
புதிய ஜனாதிபதி பதவி ஏற்று இதுவரை முஸ்லிம்களின் மத விவகாரம் குறித்து நடைபெற்ற காட்டு தர்பார் குறித்து எந்த விதமான விசாரணைகளும் முன்னெடுக்க வில்லை.
கிராண்ட்பாஸ் மஸ்ஜித் விவகாரம் முதல் தர்கா நகர் விவகாரம் வரை சம்பந்தப்பட்டவர்கள் குறித்த போதிய ஆதாரங்கள் காவல் துறைக்கு கிடைக்கப்பெற்றும் இதுவரை எவரும் கைதி செயியப்படவில்லை.
தற்போது மீண்டும் ஊழல் மோசடிகளில் தொடர்புடைய அலி பாபா உட்பட 40 திருடர்களையும் மீண்டும் கட்சியில் உள்வாங்கப்பட்டு தேர்தலில் போட்டியிடவும் சந்தர்ப்பம் கொடுப்பது பொது வேட்பாளராக நம்பி நல்லாட்சிக்காக வாக்களித்த அத்தனைபேரையும் ஏமாற்றும் செயலாகும்.
எனவே முஸ்லிம் அரசியல் கட்சிகள் இனியாவது யதார்த்தத்தை உணர்ந்து ஒரு அணியில் களம் இறங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரியாஸ் சாலி அனைத்து முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களையும் கேட்டுள்ளார்.
