ஹாசிப் யாஸீன்-
காரைதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளி பிரதேச மக்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை காரைதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 10 இலட்சம் ரூபா நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட வாழ்வாதார உபகரணங்கள் 68 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அதிதியாக கலந்து கொண்டு வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜௌபர், திவிநெகும தலைமையக முகாமையாளர் கே.எம்.அன்சார், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எம்.அலி ஜின்னா உட்பட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


