யாழ். மாவட்ட வேட்பாளர்கள் விபரம்..!

டைபெறவுள்ள பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 15 கட்சிகளும், 6 சுயேட்சைக் குழுக்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். 

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்கள் கடந்த 6ம் திகதி தொடங்கி இன்று நண்பகல் நிறைவடைந்த பின்னர், கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் தெரிவுகள் இடம்பெற்றன. 

யாழ். மாவட்டத்தில் 17 கட்சிகளும், 12 சுயேட்சைக் குழுக்களுமாக 29 கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தன. பரீசீலணையின் முடிவில் 15 கட்சிகளும், 6 சுயேட்சைக் குழுக்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 

இரு கட்சிகள் உட்பட 6 சுயேட்சைக் குழுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எங்கள் இலங்கை சுதந்திர முண்னணி மற்றும் ஐக்கிய மக்கள் கட்சி உட்பட ஞானப்பிரகாசம் அன்ரன், நீக்கலஸ், சத்தியேந்திரா சாம்பசிவம், முருகன் குமாரவேல், கருப்பையா ஜெயக்குமார், சுந்தரலிங்கம் சிவதர்சன், சின்னத்துரை சிவகுமார் உள்ளிட்ட சுயேச்சைக் குழுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

தெரிவு செய்யப்பட்டுள்ள கட்சிகள், விபரம், 

1. ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 

டக்ளஸ் தேவானந்தா 
முருகேசு சந்திரகுமார் 
சில்வெஸ்ரின் அலென்ரின் 
ப.சீவரத்தினம் 
சிவகுரு பாலகிருஸ்ணன் 
ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் 
சூசைமுத்து அலெக்சான்டர் 
பற்குணராஜா யோகேஸ்வரி 
இராமசாமிச் செட்டியர் செல்வவடிவேல் 
இராமநாதன் ஐங்கரன் 

02. இலங்கை தமிழரசு கட்சி 

மாவை சேனாதிராஜா 
மதியாபரணம் சுமந்திரன் 
கந்தையா பிரேமசந்திரன் 
தர்மலிங்கம் சித்தார்த்தன் 
சிவஞானம் சிறிதரன் 
ஈஸ்வரபாதம் சரவணபவன் 
அருந்தவபாலன் கந்தையா 
மதினி நெல்சன் 
ஆணந்தராஜ் நடராஜா 
கந்தர் நல்லதம்பி ஸ்ரீகாந்தா 

3. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 

கஜேந்திரகுமார் காங்கேயர் பொன்னம்பலம் 
செல்வராசா கஜேந்திரன் 
ஆனந்தி சிவஞானசுந்தரம் 
திருநாவுக்கரசு சிவகுமாரன் 
விஸ்வலிங்கம் மணிவண்ணன் 
அமிர்தலிங்கம் இராசகுமாரன் 
ஜெயரட்ணம் வீரசிங்கம் 
தேவதாசன் சுதர்சன் 
சின்னமணி கோகிலவாணி 
சிதம்பரநாதன் பத்மினி 

4. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 

அங்கஜன் இராமநாதன் 
இராஜேந்திரன் வசந்தகுமார் 
வீரப்பிள்ளை வீரகுமார் 
வன்னியசிங்கம் கபிலன் 
பாலசுப்பிரமணியம் சுபதீசன் 
சிவசுப்பிரமணியம் பார்த்தீபன் 
அழகராஜா யோகேஸ்வரன் 
ஞானப்பிரகாசம் அலோசியஸ் இராஜகுமார் 
தர்மலிங்கம் யோகராசா 
சீனியர் குணநாயகம் 

5. ஐக்கிய தேசிய கட்சி 

மகேஸ்வரன் விஜயகலா 
இராஜலிங்கம் சிவசங்கர் 
சின்னத்துரை குலேந்திரராஜா 
சேபஸ்ரியாம்பிள்ளை மரியதாசன் 
ரவீந்திரன் துகீபன் 
குமாரு சர்வானந்தன் 
இளையதம்பி நாகேந்திரராஜா 
முகமட் சுல்தான் ரகீம் 
வன்னியசிங்கம் பிரபாகரன் 
சின்னராஜா விஜயராஜா 

ஆகிய பிரதான கட்சிகள் உட்பட ஏனைய கட்சிகளும், தம்பிப்பிள்ளை இருதயராணி, பர்ணாந்து யோசப் அன்ரனி, நடேசபிள்ளை வித்தியாதரன், ஆனந்தசங்கரி ஜெயசங்கரி, ஜெயபாலன் ஜெயசுலக்சன், தில்லைநாதன் சாந்தராஜ் தலைமையிலான 6 சுயேட்சைக் குழுக்களும் தெரிவாகியுள்ளன, என யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி மேலும் தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -