பிரதேச அபிவிருத்தி வங்கியினது அபிமானத்துக்குரிய 30 வருட பூர்த்தி விழா!

பொத்துவில் நிருபர் எம்.ஏ. தாஜகான்

ன்னம்பிக்கையுள்ள இலங்கையருக்காக எனும் வாசகத்தோடு இலங்கை மக்களின் நன்மதிப்பை பெற்று அபிமானத்துக்குரிய 30 வருடங்களை பூர்த்தி செய்த நிலையில் பிரதேச அபிவிருத்தி வங்கியினது 'அபிமானத்துக்குரிய 30 வருட பூர்த்தி விழா' நாடளவிய ரீதியில் இன்று 2015.07.13 விழாவாக கொண்டாடப்பட்டது. 

அந்த வகையில் பொத்துவில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் அபிமானத்துக்குரிய முப்பது வருட பூர்த்தி விழாவானது வங்கி முகாமையாளர் எம்.எல்.அப்துல் சக்கூர் தலைமையில் பொத்துவில் பிரதேச அபிவிருத்தி வங்கியில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முசர்ரத் அவர்களும் சிறப்பதிதிகளாக லகுகலபிரதேச செயலாளர் எல்.ஏ.சோமரத்ன, பொத்துவில் ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எம்.இஸ்ஸதீன், பொத்துவில் குவாசி நீதிபதி எம்.எம்.சரீப் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர். 

வாடிக்கையாளருக்கான கடன்திட்டம், புதிய சேமிப்பினை ஏற்றுக்கொள்ளல் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -