(காத்தான்குடி) ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இப்தார் நிகழ்வில்- பல ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

பழுலுல்லாஹ் பர்ஹான்-

க்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் காத்தான்குடி மத்திய குழு ஏற்பாடு செய்த புனித இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 13-07-2015 இன்று திங்கட்கிழமை மாலை காத்தான்குடி கடற்கரை மைதானத்தில் இடம்பெற்றது.

மேற்படி மத்திய குழுவின் தலைவர் எம்.எச்.ஏ.பஷீர் ஜேபி தலைமையில் இடம்பெற்ற இவ்; இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்; மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்.

தலைமை வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான அணியில் போட்டியிடும் வேட்பாளர்களான எம்.எஸ்.எம்.சுபைர்,சாணக்கியன் இராசமாணிக்கம்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட்,முன்னாள் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உட்பட உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள்,புத்திஜீவிகள்,கல்வியலாளர்கள் ,கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது றமழான் தொடர்பான விஷேட மார்க்க சொற்பொழிவை மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியின் உப பீடாதிபதி அஷ்ஷெய்க் பாரூக் (அஸ்ஹரி) நிகழ்த்தினார்.

இங்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்; மட்டு- மாவட்ட தலைமை வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விஷேட உரை நிகழ்த்தினார்.

குறித்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -