இக்பால் அலி-
குருநாகல் மாவட்டத்திலுள்ள புத்திஜீவி சங்கம் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களை ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதுடன் குருநாகல் மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம் மக்களையும் நல்லாதரவு வழங்குமாறு குருநாகல் மாவட்டத்தின் புத்திஜீவிகள் சங்கத்தின் தலைவரும் கொழும்பு பல்லைக்கழக சமூவ விஞ்ஞானத்துறை துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எம் டி. எம் மஹீஸ் தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவம் அவரது இல்லத்தில் குருநாகல் மாவட்ட புத்திஜீவிகள் சங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு நடைபெற்றது அதன் போது சங்கத்தின் தலைவர் கொழும்பு பல்லைக்கழக சமூவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எம் டி. எம் மஹீஸ் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்;
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மிக முக்கியமாக இந்த நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களுக்கடையே ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடிய ஒரு சிறந்த தலைவர். அவருடைய அரசியல் போக்கிலே ஒரு இன ரீதியான போக்கு இல்லாமல் முஸ்லிம்களுக்கு உதவி செய்யக் கூடிய ஒரு உண்மையான தலைவராக அவர் செயற்படுவதை எங்களுக்குக் காணக் கூடியதாக இருக்கிறது.
அதேவேளை அவருடைய அரசியல் ர்Pதியான விடயங்களை எடுத்து நோக்கும் போது குறிப்பாக நீண்ட கால கல்வி அபிவிருத்தி ஒரு முக்கிய பங்களிப்பை செய்து வருகின்றார். அவரை நாம் ஆதரிக்கும் வiயில்தான் எங்களுடைய கல்வி அபிவிருத்தி வெற்றிப் பாதை நோக்கிச் செல்லும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அவது தற்போது முன்மொழிந்துள்ள விடயங்களைப் பார்க்கும் போது அவர் ஏற்கெனவே குருநாகலைக்கு ஒரு முஸ்லிம் பாடசாலை தருவதற்கு உறுதியளித்துள்ளார்.
அரபுக் கல்லூரிகளுக்கு மற்றும் அஹதிய்யாப் பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் ஊடாக இலவசப் பாட நூல்களையும் வழங்கத் திட்டமிட்டுள்ளார் அதேவேளை வேலையற்று இருந்த எமது முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட சிற்றூழியர்கள் நியனமத்தின் போது கணிசமாளவு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளார். இத்தகைய நல்லா மனப்பாகுடைய அரசியல் தலைவரை குருநாகல் மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம்களும் ஆதரவளிக்க வேண்டும் என்பது எமது சங்கத்தின் கோரிக்கையாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்களையும் படங்களில் காணலாம்.
