”உன்னைக் கொல்லுவேன்” றிஷாட்டுக்கு கோத்தபாய கொலை அச்சுறுத்தல்..!

சுலைமான் றாபி - நிந்தவூர்-

டந்த ஜனாதிபதித்தேர்தலில் ஜனாதிபதி மைதிரிபாலவினை ஆதரிக்க தாம் முன்வந்த போது கோத்தபாய செய்தி அனுப்பினார்... 

உன்னைக் கொல்லுவேன் என்று சொன்னார். குடும்பத்தை அழிப்பேன் என்று சொன்னார். உன்னை சிறையிலே அடைப்பேன் என்று செய்தி அனுப்பினார். அந்த வேளையில் நாம் இறைவனை நம்பிய காரணத்தினால் தவறுகள் செய்யாததன் காரணத்தினாலும், இனவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தினாலும், எமது பேச்சைக் கேட்காத காரணத்தினாலும் அவர்கள் மீது அடிமைப்படாமல் போனோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன் நேற்று (25) திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் எப்.எம். ஹிசானின் கட்சி அலுவலகத்தினை நிந்தவூரில் திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில்;

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த முஸ்லிம் சமூகத்திற்கு செய்த துரோகத்தின் விளைவால் அவர் ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இன்று மீண்டும் அவர் தான் பிரதமராக வர வேண்டும் என்று ஆசைப்படுகின்றார். அதற்காக மக்களிடத்தில் ஆணை கேட்கின்றார். இவர் ஆட்சிக்கு வருவதற்கு எமது முஸ்லிம்களில் சிலர் ஆலவட்டம் வீசிக் கொண்டிருக்கின்றனர்.இவர்களை நாம் தோற்கடிக்க வேண்டும்

கட்சியென்றால் மார்க்கம் போல் சிலர் நினைக்கின்றனர்.கட்சியினை வைத்து தொழில் செய்கின்றனர். அந்த கட்சியை வைத்து தாங்கள் பாராளுமன்றம் செல்ல நினைக்கின்றார்கள். இந்த தேர்தலில் போட்டியிடும் சிலர் ரஊப் ஹக்கீம் பிழையென்றும் கட்சி பிழையென்றும் தெரிந்தும் கூட அவர்கள் அந்த கட்சியை விட்டு விட்டு வரமுடியாத நிலையில் உள்ளார்கள். ஏனென்றால் மக்கள் அவர்களை நிராகரித்து விடுவார்கள். 

இதன் மூலம் தாங்கள் பாராளுமன்றம் செல்ல முடியாது என்கின்ற ஒரே காரணத்திற்காகவே இன்னும் அந்தக் கட்சியிலே ஒட்டிக் கொண்டுள்ளனர்.

கடந்த காலங்களில் மூன்று ஜனாதிபதித்தேர்தல்கள் தேர்தல்கள் இடம்பெற்ற போது மு.கா வின் தயவின்றியே ஜனாதிபதிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

கடந்த கால தேர்தல்களில் தம்புள்ளை வாசலினை வைத்தே தேர்தல் பிரச்சாரங்களை முடக்கி விட்டனர். ஆனால் தற்போது அவர்களிடத்திலே அந்த பள்ளியை பாதுகாப்பதற்கான அமைச்சும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பள்ளிவாசல் விடயத்தில் இதுவரைக்கும் நடந்த முன்னேற்ற நடவடிக்கைகள் என்ன? ஆறு மாதங்கள் அமைச்சராக இருந்தவர்கள் இந்தப் பள்ளிவாசலுக்குச்சொந்தமாக காணியைக் கூட பெற்றுக் கொடுக்கவில்லை. 

இந்த அமைச்சின் மூலம் மு.கா தலைவர் இந்தப் பள்ளிவாசலின் மீது பாசமாக இருக்கின்றாரா என்பதை சோதித்துப் பார்ப்பதற்காக இறைவனால் வழங்கப்பட்ட அமைச்சே இதுவாகும். ஆனால் இதில் அவர் என்ன முன்னேற்றங்களை செய்தார். ஆனால் தான் இந்த அமைச்சில் இருந்திருந்தால் 06 நாட்களுக்குள்ளே எல்லா பிரச்சினைகளையும் முடித்திருப்பேன்.

வெளிநாட்டிலிருந்து வார்பவர்கள் எங்களை தலைவர்கள் என்று சந்திக்க வரவேண்டும் என்பதற்ற்காகவோ, அல்லது அமைச்சுகள் மூலம் சுகபோகங்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்ற்காகவோ இந்த அரசியலுக்குள் வரவில்லை. மாறாக எமது சமூகத்தின் உரிமைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டு அவர்களின் இன்னல்கள் தீர்த்து வைக்கப்படவேண்டும் என்பதற்காகவே அரசியலுக்குள் கால்பதிதோம். 

இந்த பிரதேசத்தில் கற்ற இளைஞர்கள் எத்தனையோ ஆயிரம் பேர்கள் தொழிலின்றி இருக்கின்றார்கள். இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் பின்னர் எதனையும் செய்யாது இந்த மக்களை வைத்து வெறும் அரசியல் கறிவேப்பிலையாக பாவித்துள்ளதை காணமுடிகின்றது.

நமது சமூகம் தன்மானத்தோடும், தைரியத்தோடும், உரிமைகளைப்பெற்று கௌரவத்தோடு வாழுவதற்ற்காக எதிர்வரும் தேர்தலிலே 11 ஆசனங்களோடு வருகின்ற பிரதமர் ரணில் விகரமஷிங்கவை பிரதமராக்க முயற்சிகளை செய்யவேண்டும்.

மக்கள் காங்கிரஸின் வருகையினால் மு.காவின் வாக்கு வங்கிகளில் வீழ்ச்சி ஏற்பட்டு விட்டது. இம்முறை இடம்பெறும் பாராளுமன்றத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் மூன்று பேர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். மூன்று பேரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். இதில் இங்கு வாழுகின்ற ஒவ்வொரு முஸ்லீமும் சிந்தித்து செயற்படவேண்டும். எனவே இவ்விடத்தில் மக்கள் காங்கிரஸ் மூலமாக 10 முஸ்லீம்கள் போட்டியிடுகின்றார்கள். ஒட்டுமொத்தமாக மயில் சின்னத்திற்கு வாக்களித்தால் இரண்டு பேர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப முடியும் எனக் கேட்டுக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -