சர்வதேச கிரிகட் தொடருக்காக இலங்கை அணியுடன் போட்டியிட இலங்கை வந்த பாகிஸ்தான் அணியினர் போட்டித் தொடர்கள் முடிவடைந்து நாடு திரும்புவதை முன்னிட்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியினருக்கு விருந்துபசாரத்துடன் பிரியாவிடை அளிக்கும் வரவேற்பு நிகழ்வு இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலயத்தின் தூதுவர் ஓய்வு பெற்ற (பாகிஸ்தானின்) மேஜர் ஜெனரல் ஷெய்யித் ஸக்கீல் தலைமையில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் உள்ள போல் ரூமில் நேற்று (18) இரவு சிறப்பாக இடம் பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை கிரிகட் சம்மேளனத்தின் உறுப்பினர்கள்ää வெளிநாட்டு தூதுவர்கள்ää அவற்றின் பிரதிநிதிகள்ää அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிää முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாää பாகிஸ்தான் தூதுவராலயத்தில் கடமை புரியும் அதிகாரிகள்ää கிரிகட் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிரிகட் ஆர்வளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்யூஸ்ää பாகிஸ்தான் அணியின் தலைவர் அஸார் அலி ஆகியோர் தமது நன்றிகளைத் தெரிவிததுடன் பாகிஸ்தான் தூதுவராலயத்தின் தூதுவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஷெய்யித் ஸக்கீலும் தனது நன்றியினை இரு அணியினருக்கும் தெரிவித்து தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.





