உலமா க‌ட்சி மைத்திரியின் சுதந்திர கட்சிக்கு ஆதரவு- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

திர் வ‌ரும் பொதுத்தேர்த‌லில் ஜ‌னாதிப‌தி மைத்ரிபால சிறிசேன‌ த‌லைமையிலான‌ ஸ்ரீ ல‌ங்கா சுத‌ந்திர‌ க‌ட்சியை ஆத‌ரிப்ப‌து என‌ உலமா க‌ட்சி முடிவு செய்துள்ள‌தாக‌ அத‌ன் த‌லைவ‌ர் மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். 

இது ப‌ற்றி அவ‌ர் தெரிவித்த‌தாவ‌து,

இந்த‌ நாட்டு முஸ்லிம்க‌ளுக்கு மிக‌ப்பெரும் சேவைக‌ளை செய்த‌ க‌ட்சிக‌ளுள் ஸ்ரீ ல‌ங்கா சுத‌ந்திர‌க்க‌ட்சி மிக‌ பிர‌தான‌மான‌தாகும். அத்துட‌ன் நாட்டில் ஆட்சி மாற்ற‌த்தின் த‌லைவ‌ரான‌ ஜ‌னாதிப‌தி மைத்ரிபால‌ சிரிசேனா ம‌க்க‌ள் அபிமான‌ம் பெற்ற‌ எளிமையான‌ சிறந்த‌ த‌லைவ‌ராக‌ நாட்டை கொண்டு செல்கிறார் என்ப‌தை எம‌து க‌ட்சி அவ‌தானித்து வ‌ந்துள்ள‌து. 

நாட்டு ம‌க்க‌ளின் ந‌ல‌னுக்காக‌ அர்ப்ப‌ணிப்புட‌ன் செய‌ற்ப‌டும் ஜ‌னாதிப‌தியின் க‌ர‌ங்க‌ளை ப‌ல‌ப்ப‌டுத்துவ‌து ச‌மாதான‌த்தை விரும்புவோர் என்ற‌ வ‌கையில் எம‌து க‌ட்சொயின் க‌ட‌மையாகும்.

இந்த‌ வ‌கையில் ஜ‌னாதிப‌தியையும், அவ‌ர் த‌லைமையிலான‌ சுத‌ந்திர‌க்க‌ட்சி ம‌ற்றும் ஐக்கிய‌ ம‌க்க‌ள் சுத‌ந்திர முன்ன‌ணி ஆகிய‌வ‌ற்றுக்கு ஆத‌ர‌வ‌ளிப்ப‌து என்ற‌ தீர்மான‌த்தை ப‌ல‌த்த‌ ம‌சூறாவின் பின் முடிவெடுத்துள்ள‌து. 

அத‌ன் ப‌டி எதிர் வ‌ரும் போது தேர்த‌லில் ஸ்ரீ ல‌ங்கா முஸ்லிம் உல‌மா க‌ட்சி ஜனாதிப‌தி மைத்ரி த‌லைமைலான‌ சுத‌ந்திர‌ க‌ட்சியை ஆத‌ரிப்ப‌துட‌ன் அத‌ன் வெற்றிக்காக‌ நாடு முழுவ‌தும் பிர‌ச்சார‌த்தை மேற்கொள்ள‌வுள்ள‌தாக‌ முபாற‌க் மௌல‌வி மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -