தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசாத் சாலி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமக்கு கண்டி மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு அவர் கோரியுள்ளார்.
ஆனால் அதற்கு பிரதமரோ அவரை ஐக்கிய தேசியக் கட்சியில் சார்பில் கிழக்கில் போட்டியிடுமாறு கடுந்தொனியில் கூறியுள்ளார்.
பிரதமரின் இக்கருத்தினால் அசாத் சாலி, மனவருத்தமடைந்ததுடன் பெரும் ஏமாற்றமும் அடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
