பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை 'மிமா' சமூக சேவை அமைப்பின் 10வது ஆண்டு நிறைவையொட்டி விஷேட இப்தார் நிகழ்வும்,மார்கச் சொற்பொழிவும் இன்று வெள்ளிக்கிழமை(10-07-2015)அல்-மதீனா வித்தியாலயத்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
'மிமா' சமூக சேவை அமைப்பின் தலைவர் என்.எம்.அனீஸ் அஹமட் தலைமையில் நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வில் அல்-ஹாபிழ் எஸ்.எம்.நஜிமுத்தீன் புனித றமழான் நோன்பு பற்றிய விஷேட உரையாற்றினார்.
இதில் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ரி.எல்.அப்துல் மனாப், மற்றும் அரசியல் பிரமுகர்கள்,கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்,கழகங்களின் பிரதிநிதிகள், சமூக சேவையாளர்கள், ஊர்பிரமுகர்கள் உள்ளீட்ட இருநூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அமைப்பின் செயலாளர் யு.எஸ்.சஜீத் மற்றும் உறுப்பினர்கள் நிகழ்வை நெறிப்படித்தினார்கள்.




