சுலைமான் றாபி-
இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் நிந்தவூர் கிளை ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு இன்று (02.07.2015) நிந்தவூர் மாவட்ட தொழில் பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் நிந்தவூர் கிளையின் ச்தாபகத்தளைவரும், கணனி தகவல் தொழில்நுட்ப விரிவுரையாளர் யு. முஜீபுர் ரஹுமான் தலைமையில் இடம்பெற்ற இவ்இப்தார் நிகழ்வில் உலமாக்கள், வைத்தியர்கள், சமூகவியலாளர்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை இந்த இப்தார் நிகழ்வின் விஷேட அம்சமாக எண்ணையில் வெதுப்பப்பட்ட உணவுப் பொருட்களை தவிர்த்து பழவகைகள் மூலமாக அனைத்து நோன்பாளிகளும் தங்களது நோன்பினை திறந்துள்ளதோடு, சமுதாயத்தில் இனிவரும் காலங்களில் இப்தார் நிகழ்வுகளில் அதிகமாக எண்ணையில் வெதுப்பப்பட்ட உணவுப் பொருட்களை தவிர்த்து, பழவகைகள் மூலமாக நோன்பு திறப்பதற்கு இங்கு அறிவுறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்

