ராஜபக்ஷ வென்றால் வெள்ளைவேன் கலாசாரம் தலை தூக்கும் - பிரதமர்

ராஜபக் ஷ யுகம் மீண்டும் இந்நாட்டுக்கு வருமானால் எமது நாடு இருண்ட யுகத்துக்குள்ளேயே தள்ளப்படும். வெள்ளை வேன் கலாசாரம் தலை தூக்கும். இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் தலை தூக்கும். அப்படியானதொரு நிலைமை உருவாவதை ஐக்கிய தேசியக் கட்சி விரும்பவில்லை. நாட்டு மக்களும் இதனை விரும்பமாட்டார்கள். எனவே நடைபெறவிருக்கும் தேர்தலில் மக்கள் புத்திசாலித்தனமாகச் செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

ஜனாதிபதி தேர்தலில் எமக்குக் கிடைக்கப் பெற்ற வெற்றி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் கிடைக்கும் என்றும் பிரதமர் இதன் போது நம்பிக்கை தெரிவித்தார்.

கண்டி தெல்தோட்டை நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இக்கருத்தைத் தெரிவித்தார்.

அங்கு அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், லக் ஷ்மன் கிரியெல்ல கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், சமய குருக்கள் என பலதரப்பட்ட விருந்தினர்களும் கலந்து கொண்ட மேற்படி பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ராஜபக் ஷ வன்முறை ஆட்சிக்கு மீண்டும் நாம் துணை போவதா? எமது நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதா? எனக்கேட்கிறேன். அவ்வாறு மீண்டும் ராஜபக் ஷ யுகம் வருமாயின் வெள்ளைவேன் வரும். நாடு அபாய பாதையில் செல்லும். இன, மத பேரினவாதங்கள் தலைதூக்கும்.

இவ்வாறானதொரு நிலைமை இனியும் வரக்கூடாது. அதற்கு இடமளிக்கவும் கூடாது. இவற்றைப் புரிந்து மக்கள் அவதானத்துடனும் புத்திசாலித்தனத்துடனும் ஒன்றிணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்து கண்டி மாவட்டத்தில் குறைந்த பட்சம் 09 ஆசனங்களையாவது பெற்றுக் கொடுக்க வேண்டும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியால் பெற்றுக் கொடுக்கப்பட்ட அமோக வெற்றியாகும். அதே வெற்றியே எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலிலும் கிடைக்கவுள்ளது. கண்டி நகருக்கான பல அதிவேக நெடு-ஞ்சாலைகள் அமைக்கத் திட்டம் வகுத்துள்ளோம். அதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பான் அரசாங்கம், சீன அரசு ஏனைய பல நாடுகளின் வங்கிகளும் உதவி வழங்க முன்வந்துள்ளன. கொழும்பு நகரைப் போன்று கண்டி நகரும் அபிவிருத்தியடைவதோடு பேராதனை கங்கவெட்டகோரளை, தலாதுஓயா ஹேவாஹெட்ட பிரதேச நகர் உள்ளிட்ட பிரதேச வீதிகளும் அபிவிருத்தியடையும் எனவும் நான் கூறிக் கொள்கிறேன். மேலும் கண்டி மாவட்டத்தின் பெருந்தோட்டங்களை அபிவிருத்தி செய்வதுடன் கிராமிய வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். 

அத்துடன் பிரதேச பாடசாலைகள், அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. தெல்தோட்டை பிரதேசத்திற்கான குடிநீர் திட்டமொன்றும், நில்லம்பை ஆற்று நீரிலிருந்து பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. ஏனைய பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நிகழ்வில் லக் ஷ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம், சாந்தினி கோங்காகே, ம.மா.சபை உறுப்பினர் வேலுகுமார் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.vk
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -