எஸ்.சிவகாந்தன்-
தேசிய மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஊவா மாகாணத்திற்குட்பட்ட 103 பாடசாலைகளில் இன்றைய தினத்தில் பல்வேறுப்பட்ட அறிவுறுத்தல் கருத்தரங்குகள் இடம்பெற்றன .
அதனையொட்டி பதுளை பகுதியின் டிக்வெல்ல , ஸ்ரீ சண்முகாநந்தா தமிழ் வித்தியாலயத்தில் 28/07/2015 இன்றைய தினம் மதுஒழிப்பு சம்மந்தமான விழிர்புணர்வு பிரசார நிகழ்வொன்று, பாடசாலை அதிபர் கே.பரணிதரன், தலைமையில் இடம்பெற்றது.
பிரதி அதிபர் ஏ.மகேந்திரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிழ்வில் சிறப்பு அதிதியாக பதுளை பொலிஸ் அதிகாரி அண்ணாதுரை உட்பட, ஆசியர்கள் மாணவர்கள் பங்குபற்றலுடன் , நடைமுறையிலுள்ள போதைப்பொருள் பாவனையில் ஏற்படும் தீய விளைவுகள் பற்றி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறிவுருத்தப்பட்டது.




