எனது லெம்போகினியை என்னிடமே தாருங்கள் - நாமல்

தான் நாட்டிற்கு கொண்டு வந்த லெம்போகினி எங்கே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார்.

சூரியாவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்து கருத்து வெளியிட்டவர்,

அவ்வாறு சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் போலியானதென்பது தனக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளாமையின் மூலம் உறுதியாகியுள்ளது.

முதுகெலும்பை நேராக வைத்துக்கொண்ட காலம் போய் முதுகெலும்பை மடக்கிக்கொண்டு இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளிடம் மண்டியிடும் யுகம் உருவாகியமையே மாற்றத்தின் பின் சென்றவர்களுக்கு கிடைத்த ஒரே மாற்றம்.

கடந்த 10 வருடத்தினுள் நாங்கள் முதுகெலும்பை நேராக வைத்துக்கொண்டு செயற்பட்டோம்.

உலகத்தின் மிக கொடிய தீவிரவாதத்தை ஒழித்தோம். பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியடைய வேலைத்திட்டங்களை மேற்கொண்டோம். அபிவிருத்திகளை மேற்கொண்டோம்.

கடந்த நாட்களில் வேட்டையாடும் ஆட்சியை ஆரம்பித்தார்கள். விமல் வீரவன்சவின் மனைவியை விசாரணைக்கு அழைத்து சென்றார்கள், மஹிந்தானந்தவின் மகனை கொண்டு சென்றார்கள்.

என்னை எனது அம்மா, தம்பி என அனைவரையும் விசாரணைக்கு அழைத்து சென்றார்கள்.

அழைத்து சென்று கூறுகின்றார்கள், நாமலுக்கு விமானம் உள்ளது லெம்போகினி உள்ளதென. அவை எங்கே என்னிடம் அதனை தாருங்கள் என நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -