ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கவிருக்கும் தேசியப்பட்டியலில் அட்டாளைச்சேனைக்கு இம்முறை தேசியப்பட்டியல் நிச்சயமாக வழங்கப்படும். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சற்று முன்னர் உறுதியளித்துள்ளார்.
மு.காவின் சார்பில் ஜக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் 3 வேட்பாளர்களையும் ஆதரித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் உச்சபீட உறுப்பினருமாகிய எ.எல்.எம்.நஸீர் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இடம் பெற்ற பொத்துக்கூட்டத்தல் கலந்து கொண்டே உறுதியளித்தார்.
இந்நிகழ்வில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.




