இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் காலமானார்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மேகாலயாவில் காலமானார். மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) இன்று நடைபெற்ற கருத்தரங்கில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த அப்துல் கலாமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

மயங்கி சரிந்த அவரை அங்குள்ள பெத்தானி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து ராணுவ மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் குழு வரவழைக்கப்பட்டது.

இந்த மருத்துவர்கள் அப்துல் கலாமின் உடல்நிலையை பரிசோதனை செய்து, தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அப்துல் கலாமின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இறுதிச் சடங்கு ராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன 

தமிழகத்தின் தெற்கே இராமேஸ்வரத்தில் 1931 இல் பிறந்த அவர் இந்தியாவின் பலஸ்டிக் ஏவுகணை திட்டத்தின் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். இந்தியாவின் அணுத்திட்டத்தில் இவர் ஆற்றிய பங்களிப்புக்காக இவருக்கு பாரத ரத்னா விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 2002இல் இந்திய குடியரசுத் தலைவராக அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த பாரதிய ஜனதாக் கட்சியினாலும் மற்றும் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸினாலும் கூட்டாக நியமிக்கப்பட்ட அப்துல்கலாம் அவர்கள், 5 ஆண்டுகள் அந்த பதவியில் இருந்தார். இந்தியாவின் வடகிழக்கில் உள்ள சில்லோங்கில் நிகழ்வு ஒன்றுக்காக சென்றிருந்த அப்துல் கலாம் அவர்களுக்கு அங்கு திடீரென சுகவீனம் ஏற்படவே அவர் அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்வி நிறுவனம் ஒன்றில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகின்றது. திருமணம் செய்யாமல் கடைசிவரை வாழ்ந்த அப்துல் கலாம் அவர்களின் மறைவு குறித்து பல முன்னணி அரசியல்வாதிகளும், தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இன்று 3 மணிக்கு அப்துல் கலாம் கவுகாத்தி விமான நிலையம் வரும் போது எடுத்த படங்கள்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -