இக்பால் அலி-
இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானியும் தொழில் நுட்ப வல்லுநரும் குடியரசுத் தலைவருமாகிய விளங்கிய ஏ. பீ. ஏ. கலாம் தம் 84 வது வயதில் மரணம் அடைந்த செய்தி கேட்டு ஆழ்ந்த துக்கமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளதாக என்று முஸ்லிம் சமயம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும் அவரது எளிமையான பேச்சும் எல்லோரையும் கவரக் கூடியது. 'எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில்' என்ற அவர் 'கனவு காணுங்கள்' அந்தக் கனவை நனவாக்கப் பாடுபடுங்கள';
என்ற வாக்கியத்தை இளைஞர் மனதில் வேரூன்றச் செய்தவர்உலகம் போற்றும் விஞ்ஞானி அப்துல் கலாமின் மறைவு இலங்கை, இந்தியா நாட்டு மக்களுக்கும் உலக மக்களுக்கும் பெரும் பேரழிப்பாகும் என்பதுடன் துரயத்தில் ஆழ்ந்துள்ள இந்நாட்டவர்களுக்கும் அந்நாரது குடுபத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
