நிந்தவூர் லகான் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு!

சுலைமான் றாபி-

நிந்தவூர் லகான் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு இன்று (11.07.2015) நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது.

விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம். எம். சாஹிர் அஹமட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் ஏ.எல் அனஸ் அஹமட், நிந்தவூர் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். தாஜுதீன், நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எல். நிசாமுடீன், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.எம். மீராசாஹிப் உள்ளிட்ட நிந்தவூரில் காணப்படும் விளையாட்டுக் கழகங்களின் தலைவர், செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் விஷேட அம்சமாக நிந்தவூரில் முதன் முதல் "முப்தி" பட்டம் பெற்ற மௌலவி எச்.எம். மின்ஹாஜ் அவர்களினை நிந்தவூர் லகான் விளையாட்டுக் கழகம் கௌரவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -