பொதுத்தேர்தலில் போட்டியிடுமாறு பல மாவட்டங்களில் இருந்து அழைப்பு வந்த போதிலும் இறுதியில் குருணாகல் மாவட்டத்தை தான் தெரிவு செய்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை, மீனவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புத்த பெருமானின் பாதுகாப்புடன் கூடிய வரலாற்று இராசதானிகள் 04 குருணாகல் மாவட்டத்தில் காணப்படுகின்றமையினால் தான் அம்மாவட்டத்தை தெரிவு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல் நிலை காணப்படுவதாகவும் அது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பொலிஸாரிடம் கடிதம் ஒன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 11ஆம் திகதி ஹம்பாந்தோட்டை – வலஸ்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என அவரது ஊடக பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட குறிப்பிட்டிருந்தார்.
