காதலனின் வீட்டுக்கு முன் தீக்குழித்த பொலிஸ்கான்ஸ்டபிளான காதலி -யாழில் சம்பவம்

னது கணவனின் வீட்டின் முன்பாக நின்று தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டி தற்கொலைக்கு முயன்ற யுவதியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இலங்கை பொலிசில் கொன்ஸ்டபிளாக கடமையாற்றும் அச்சுவேலி யுவதியொருவரே இந்த விபரீத காரியத்தை செய்துள்ளார்.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பைரவி (வயது 26) என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பொலிஸில் பணியாற்றும் இந்த யுவதி, நீதிமன்றத்தில் கடமையாற்றும் நபர் ஒருவரை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பில், நேற்று வெள்ளிக்கிழமை தான் பதிவு திருமணம் செய்து கொண்ட நபரின் வீட்டிற்கு சென்றபோது ஏற்பட்ட தகராறில், குறித்த பெண் கான்ஸ்டபிள் குறித்த நபரின் வீட்டிற்கு முன்பாக நின்று தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

படுகாயங்களுக்கு உள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் தற்போது யாழ். போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணையினை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நன்றி..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -