பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனையின் இளைஞர்களே தொண்டர்களே போராளிகளே அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தேர்தலானது அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாக அமையவுள்ளது. ஸ்ரீ.மு.கா வின் அத்தியாயத்தைப் புரட்டிப்பார்க்கின்ற போது இப்பிரதேசத்தின் பணி அளப்பெரியது.
ஆனால் இப்பிரதேசம் தேர்தல் மூலம் மறைந்த டாக்டர் ஜலால்தீனுக்குப் பிறகு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெறமுடியாமையானது துரதிஷ்டம்.. இருந்தாலும் நடைபெறவுள்ள தேர்தலின் பிற்பாடு இப்பிரதேசத்துக்கு தேசிய பட்டியல் பாராளுமன்றப் பதவியை கட்சி வழங்கவுள்ளதாக மிக மிக நம்பகமாகத் தெரிய வருகின்றது.
குறிப்பாக அட்டாளைச்சேனைக்கே இப்பதவி வழங்கப்படவுள்ள சூழ்நிலையில் இப்பதவியை யாரிடம் ஒப்படைப்பது என்பது கட்சிக்கும் தலைமத்துவத்துக்கும் தர்மசங்கட நிலைமையாகவுள்ளது.
ஏனெனில் கட்சி சார்பாக அட்டாளைச்சேனையைப் பிரதி நிதித்துவப்படுத்தியிருந்த மற்றும் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கின்ற பிரதிநிதிகளும் பிரமுகர்களும் அதற்குரிய அந்தஸ்துகளை இழந்து தவிக்கின்றனர்.
போராளிகளையும் தொண்டர்களையும் இவர்களின் தேவைகளுக்குப் பயன்பத்திவிட்டு இவர்களின் கைகளில் அதிகாரங்கள் கிடைக்கப்பெற்ற போது அவர்கள் அனைபேரையும் மறந்து இவர்களின் உறவினர்களுக்கும் சகாக்களுக்கும் தொழில் வாய்ப்பு மற்றும் இதர சலுகைகளை வழங்கி வந்ததுடன் அதிகாரத்தினால் கிடைக்கின்ற சுவண்டிகள் அனைத்தையும் இவர்கள் மாத்திரமே அனுபவித்து வந்தமையும் வருகின்றமையுமே இதற்குக் காரணமகும்.
இவர்கள் போராளிகளையும் இளைஞர்கயும் மதிக்கவுமில்லை மதிப்பதுமில்லை மாறாக அவர்களை நசுக்கி மிதித்து அனுபவிக்கலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கன்றார்கள்.
எனதன்புக்கும் மதிப்புக்குமுரிய அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிரஸ் போரளிகளே இளைஞர்களே என்னைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்.
நமது கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை கிட்டத்தட்ட 30 வருடங்களாக தொடர்ச்சியாக எந்தவித களங்கமுமின்றியும் கட்சி மூலம் எவ்வித நலன்களைப் பெறாமலும் என்னை நமது கட்சிக்காக முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டிருக்கின்றேன்.
வட-கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முதல் இன்று வரை அத்தனை தேர்தல்களிலும் என்னை அர்ப்பணம் செய்திருக்கிறேன்.எமதூரிலுள்ள கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பிரமுகர்கள் என்று சொல்லப்படுபவர்களில் சிலர் 1994ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் நாட்டை விட்டு வெளியே சென்று எமது கட்சிக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தமையினால் மீண்டும் திரும்பி வந்து பதவிகளையும் பட்டங்களையும் பெற்று அனுபவித்து வந்ததை நாங்கள் மறந்து விட முடியாது.
ஆனால் நான் அன்றும் ஒரு போராளி இன்றும் ஒரு போராளியாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றேன்.
அற்ப சொற்ப அதிகாரங்கள் மூலம் போராளிகளையும் இளைஞர்களையும் கட்டிக்காக்க முடியாமல் சுவண்டிகளை மாத்திரம் அனுபவித்துக் கொண்டு பிரமுகர்களும் பிரதிநிதிகளும் என்று சொல்லிக் கொண்டு உலாவித்திரிபவர்களின் கைகளில் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டால் என்ன நிகழும் என்பதனை போராளிகளே சற்று சிந்தித்துப் பாருங்கள்.
அன்புக்குரிய நமதூரின் இளைஞர்களே கட்சியின் போராளிகளே! பிரதிநிதிகளும் பிரமுகர்களும் என்று சொல்லப்படுப்படுபவர்களை விட நானும் கட்சி மூலம் பதவி பட்டங்களைப் பெறுவதற்கு மிக மிக அருகதையுடையவன் என்பதனை நீங்கள் ஒரு போதும் மறுக்கமாட்டீர்கள்.ஆனால் எனது கையில் பணம் இருந்திருந்தால் நீங்கள் அதனை; எப்பவோ பெற்றுத்தந்திருப்பீர்கள்.
பணத்தைச் செலவு செய்து அரசியலுக்கு வந்தவர்கள் எவ்வாறு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அதீத பணத்தைச் செலவழிக்காமல் புத்திசாதூர்யமான முறையில் சகோதரர் ஏ.எல்.தவம் போன்றவர்கள் எவ்வாறு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
போராளிகளே இளைஞர்களே! உங்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் எனக்காக ஏன் உங்களால் எனக்கொரு ஒரு சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தர முடியாது? அதற்கான சந்தர்ப்பம் இதோ வந்துள்ளது.
எமதூருக்கு வழங்கப்படவிருக்கின்ற தேசிய பட்டியல் பாராளுமன்ற பதவியைப் பெற்றுத் தருவதற்கு ஏன் நீங்கள்தயக்கம் காட்டுகின்றீர்கள் அவ்வாறு பெற்றுத்தந்தால் நீ என்ன செய்வாய்.? என்று நீங்கள் என்னிடம் கேட்கலாம்.
.வழங்கப்படவுள்ள தே.ப.பா. உறுப்பினர் பதவியானது அட்டாளைச்சேனை ஒலுவில் பாலமுனை போன்ற கிராமங்களை பிரதானப் படுத்துவதுடன் இக்கிராமங்களின் அபிவிருத்திக்கே முன்னுரிமைப் படுத்த வேண்டியிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
ஏனெனில் அம்பாரை மாவட்டத்திலுள்ள பொத்துவில் அக்கரைப்பற்று நிந்தவுர் சாய்ந்தமருது மருதமுனை போன்ற கிராமங்கள் எமது கட்சி மூலம் வழங்கப்பட்ட தே.ப.பா.உ பதவியை ஏற்கனவே அனுபவித்திருக்கின்றன.
ஆகவே இன்ஸா அல்லாஹ்:
1.அட்டாளைச்சேனைப் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்கின் அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் முதலிடம் வழங்குவதுடன் இப்பிரதேசங்களின் நிலையான அரசியல் அதிகாரங்களை நிலை நாட்ட வழிவகுப்பேன்.
2.இரண்டு வருடங்களுக்குள் அட்டாளைச்சேனையின் முதுகெலும்பாகவுள்ள சம்புக்களப்பு வடிச்சல் திட்டத்தை நிறைவேற்றித் தருவேன்.
3.அட்டாளைச்சேனை ஒலுவில் பாலமுனை பிரதேசங்களில் கணித விஞ்ஞான மற்றும் தொழில் நுட்பத்துறையில் உயர் கல்வி கற்கின்ற 100 மாணவர்களுக்கு முதலாவது வரவு செலவு திட்ட நிதியிலிருந்து தலா ரூபா.40000 (நாற்பதாயிரம்) வழங்குவேன்.
4.பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் வாகன இறக்கமதி அனுமதிப் பத்திரத்தின் மூலம் கிடைக்கப்பெறும் பணத்திலிருந்து ஒரு பகுதியை அட்டாளைச்சேனை ஒலுவில் பாலமுனை பிரதேசங்களில் உள்ள பெரிய பள்ளிவாயல்களுக்குப் பகிர்ந்து கொடுப்பேன்.
5.முகத்துவாரத்தில் பாலம் ஒன்றை அமைப்பதன் மூலம் அட்டாளைச்சேனை –அக்கரைப்பற்று கடற்கரை வீதியை இணைத்துத்தருவேன்.
6. அட்டாளைச்சேனை ஒலுவில் பாலமுனை பிரதேசங்களில் உள்ள மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி இல்லாதவர்களுக்கு இரண்டு வருட காலத்துக்குள் அவைகள்; இலவசமாகப் பெற்றுக்கொடுக்கப்படும்.
7.அட்டாளைச்சேனை ஒலுவில் பாலமுனை பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் குடும்பங்களுக்கு ஏதாவது ஒரு வழியில் உதவிகள் சேர்வதற்கு வழிவகுப்பேன்.
8.தொழில் வாய்ப்பின் போது பணம் பெறாமல் அட்டாளைச்சேனை ஒலுவில் பாலமுனை பிரதேசங்களில் உள்ள போராளிகளுக்கும் இளைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்குவேன்.
9. அட்டாளைச்சேனை ஒலுவில் பாலமுனை பிரதேசங்களில் உள்ள வறுமை கோட்டின் கீழ் வாழுகின்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு வழிசமைப்பேன்.
10. அட்டாளைச்சேனை ஒலுவில் பாலமுனை பிரதேசங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கு முழுமையான பங்களிப்பைச் செய்வேன்.
11.அட்டாளைச்சேனை ஒலுவில் பாலமுனை பிரதேசங்களில் உள்ள பள்ளி வாயல்களில் கடமையாற்றும் முஅத்தின் கத்தீப்மார்களுக்கு நிதயுதவிகளைப் பெற்றுக்கொடுப்பேன்
12.அத்துடன் அட்டாளைச்சேனையில் பிரமுகர்களினதும் பிரதிநிதிகளினதும் தலையீடு இல்லாத சுயாதீனமான மத்திய குழு அமைக்கப்பட்டு அதன் மூலமே அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பேன். மத்திய குழுவின் தலைவராக நான் ஒரு போதும் இருக்கமாட்டேன்.
13.கட்சிக்கோ அல்லது தலைமத்துவத்துக்கோ அல்லது போராளிகளுக்கோ நான் ஒரு போதும் நம்பிக்கைத் துரோகம செய்யமாட்டேன்.
14.இன உறவுகளை கட்டியெழுப்புவதற்கும் முஸ்லிம்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளக்கு குரல் கொடுப்பதற்கும் நான் ஒரு போதும் தயங்கமாட்னே;.
15.கட்சியினதும் தலைமத்துவத்தினதும் உடன்படிக்கைளுக்குக் கட்டுப்படுவேன்.
16.பொத்துவில் ஆலிம்சேனை காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு தன்னாலான முழு முயற்சியையும் எடுப்பேன்.
17.இறக்காமம் வரிப்பத்தான்சேனை மக்களின் தேவைப்பாடுகளை தீர்த்து வைப்பதற்கு என்னுடைய முழு பங்களிப்பையும் செய்வேன்.
18.இதுவரை நெற்செய்கைக்குட்படுத்தப்பட்டு வந்த கரும்புக்காணிகளை மீண்டும் நெற்செய்கை மேற்கொள்வதற்கு மீட்டுத்தருவதற்கு முழுப் பங்களிப்பையும் செய்வேன்.
19.அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்களின் மேம்பாட்டுக்கு உதவுவேன்.
எமது கட்சிக்கு நான் கடந்த 30 வருடங்களாக செய்து கொண்டிருக்கின்ற பணி உணமையானதாக இருந்தால் போராளிகளும் கட்சியும் தலைமத்துவமும் எனது வேண்டுதலை ஒரு போது நிராகரிக்கமாட்டார்கள என நம்புகின்றேன்.
இவ்வண்ணம்.
இக்பால் எம் யூசுப் (IQBAL M USSUFF)
அட்டாளைச்சேனையின் முன்னாள் இளைஞர் காங்கிரஸ்
அமைப்பாளரும் இன்னாள் மத்திய குழு ஆலோசகரும்
