தனித்தா? இணைந்தா? மு,கா அவதானமாகவும் நிதானமாகவும் முடிவெடுக்க வேண்டிய நிலைப்பாடு உள்ளது!

திர்வரும் தேர்தலில் தனித்துப்போட்டியிடுவதா, இணைந்து போட்டியிடுவதா என்பதை தீர்மானிப்பதில் மு.கா மிகவும் அவதானமாகவும் நிதானமாகவும் முடிவெடுக்க வேண்டிய நிலைப்பாடு உள்ளது. 

மீள்எழுச்சி பெற்று வரும் ஐ.தே.க ஆனது முஸ்லிம் பிரதேசங்களில்; மு.கா மீது அதிருப்தியில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களை தங்கள் கட்சி சார்பாக பிரபல்யமான நபர்களை நிறுத்தி தம்வசம் ஈர்த்துக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை.ஏனெனில், ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான நல்லாட்சியில் மிகப்பிரதான பங்குவகிப்பது ஐ.தே.கட்சியே. இதனைத் துரும்புச்சிட்டாகவும், நல்லாட்சி, மதநல்லிணக்கம், ஊழல் எதிர்ப்பு, வேலைவாய்ப்பு, உரிமையுடன் கூடிய அபிவிருத்தி போன்ற சில காரணிகளை முன்னிலைப்படுதியும் ஐ.தே.க தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதில் ஐயமில்லை. 

மு.கா வின் இதயமாகிய அம்பாறை மாவட்டத்தில் மு.கா, ஐ.தே.க உடன் இணைந்து போட்டியிடுமிடத்து மு.கா சார்பாக 3 தொகுதிகளையும் பிரதிநிதித்துவபடுத்தி 3 வேட்பாளர்கள் மாத்திரமே களமிறக்கப்படுவர். இதன் காரணமாக மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் அவரவர்களின் ஊரின் அரசியல் இருப்பு,அதிகாரம்,அபிவிருத்தி என்பவற்றினை முன்னிலைப்படுத்தி ஐ.தே.க, அ.இ.ம.கா சார்பாக களமிறக்கப்படக்கூடிய முஸ்லிம் உறுப்பினர்கள்
பிரச்சாரங்களை முன்னெடுப்பர்.

குறிப்பாக பொத்துவில்,சாய்ந்தமருது,மருதமுனை போன்ற பிரதேசங்களில் மு.கா ற்கு அதிகமான நெருக்கடிகள் தோன்றும்.இந் நெருக்கடிகளை ஐ.தே.க அவர்கள் சார்பான முஸ்லிம் வேட்பாளர்களின் மூலமாக வழங்கப்படும் வாக்குறுதிகளுக்கு உத்தரவாதம் அளிப்பதன் மூலம் அவர்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தக் கூடிய வாய்புகளும் உண்டு.ஏனெனில் ஐ.தே.க இன் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பிரதிநிதியே.அத்துடன் ஐ.தே.க இன் ஆட்சியில் ஒப்பீட்டளவில் திருப்தியான வாழ்க்கை முறையையும் எதிர்பார்க்கலாம்.இந்த தேர்தலை ஐ.தே.க மிகவும் சாணக்கியமாக அணுகும்
என்பதே உண்மை.

தேர்தலைத் தொடர்ந்து தேசிய அரசாங்கமே அமைக்கப்படும் என்பதனாலும், கட்சிதாவல்களில் ஈடுபடும் நிலையில் ஐ.தே.க சார்பாக போட்டியிட்டு பாராளுமன்றுக்கு தெரிவாகும் உறுப்பினர்களின் பாராளுமன்ற உறுப்பினர் நிலை ரத்தாக்கூடிய சட்டம் வரக்கூடிய சாத்தியம் இருப்பதாலும்,ஒவ்வொரு ஊரினதும் அரசியல் அதிகாரம்,அபிவிருத்தி என்பவற்றினை உறுதிப்படுத்த வேண்டி இருப்பதாலும் எதிர்வரும் தேர்தலில் மு.கா தனித்து கேட்பதே சிறந்தது...இவ்வாறான திரிசங்கு நிலைகள் தோன்றலாம் என்பதும் மு.கா தலைமைக்கு தெரியாமலும் இல்லை.

M.A.Jeswath (Pottuvil)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -