சாய்ந்தமருது தோணா வீதிக்கு மின்சார இணைப்பு!

எம்.வை.அமீர் -

ல்முனை மாநகரசபையின் சாய்ந்தமருது தோணா வீதி இதுவரையும் மின்சார வசதிகளற்றதாக இரவு வேளைகளில் மிகுந்த இருள் நிறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக சட்ட விரோத நிகழ்வுகள் நடைபெறும் இடமாகவும் காணப்பட்டது. இப்பகுதியில் ஒரு சந்தர்ப்பத்தில் கொலை செய்யப்பட்ட உடலத்தைக் கூட இருள் நிறைந்த தோணாவில் போட்டுவிட்டுச்சென்றிருந்தனர்.

மிகுந்த இருள் நிறைந்தத இவ்வீதியால் இரவு வேளைகளில் பயணம் செய்வதும் மிகுந்த அச்சுறுத்தலான ஒன்றாக காணப்பட்டது.

சாய்ந்தமருது தோணா வீதி தொடர்பாக கருத்தில் கொண்ட கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம் பர்ஹான் அவர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொன்டதன் பயனாக முதற்கட்டமாக முகத்துவாரத்தை அண்டிய வீதிக்கு புதிய மின் கம்பங்கள் இடப்பட்டு மின்சார கேபிள்கள் இடப்பட்டுள்ளன.

இரவு வேளைகளில் இருளில் மூழ்கும் மின்சார வசதியற்ற தோணா வீதியின் ஏனைய பகுதிகளுக்கும் மின்கம்பங்களை இட்டு மின்சார வசதிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம் பர்ஹான் எமது செய்திச்சேவைக்கு கருத்து வெளியிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -