கல்முனை சாகிறா கல்லூரியின் பழைய மாணவ சங்கத்தின் இப்தார் நிகழ்வு!

அஷ்ரப் ஏ சமட், அஹமட் இர்ஷாட்-

ல்முனை சாகிறா கல்லூரியின் பழைய மாணவ சங்கத்தின் கொழும்பு கிளையானது வருடா வருடா நடாத்தும் புனித நோன்பு திறக்கும் இப்தார் நிகழவின் மூன்றாவது நிகழ்வானது 01.07.2015 புதன் கிழமை வெள்ளவத்தையில் உள்ள மரீன் க்ரேன் மண்டபத்தில் இடம் பெற்றது.

சாகிறா கல்லூரியின் பழைய மாணவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் சனூஸ் காரியப்பர் தலைமையில் இடபெற்ற இவ்வைபவத்தில் 2020ம் ஆண்டில் கல்லூரியானது எவ்வாறான வளர்ச்சிப்படியினை அடைந்திருக்கும் என்ற முடிவினை அடிப்படையாகக் கொண்ட மலர் வெளியீடும் இடம்பெற்றதானது குறிப்பிடத்தக்க விடயம காணப்பட்ட அதே நேரத்தில் கல்லூரியின் முன்னாள் காலம் சென்ற அதிபர் மர்ஹூம் ஜெமீல் அவர்களை உரையாற்றிய அதீதிகள் அனைவரும் நினைவு கூர்ந்தனை பார்க்க கூடியதாக இருந்தது.

இவ்வைபவத்துக்கு பிரதாண பேச்சாளராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.த்லீப் நவாஸ் கலந்து கொண்டதோடு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல், சிரேஸ்ட வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிஃப்ரி,பாடசாலையின் முன்னாள் அதிபர் அபூபக்கர், இன்னாள் அத்பர்ப் பி.எம்.எம்.பதுர்டீன், மற்றும் பாடசாலையில் கல்வி கற்று கொழும்பு மாவட்டத்தில் சகல துறைகளில்லும் தொழில் புரியும்  கல்லூரியின் பழைய மாணவர்கள் புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டமையினை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -