அஸ்ரப் ஏ சமத்-
லேக் ஹவுஸ் கடமையாற்றும் முஸ்லீம் ஊழியா்கள் அடங்கிய முஸ்லீம் மஜ்லிஸின் ஏற்பாட்டில் வருடாந்த இப்தாா் தெஹிவளை களுபோவிலையில் உள்ள அல் முஸ்லீமாத் அநாதை மற்றும் பெற்றோா் ஆதரவு அற்ற முஸ்லீம் பெண்கள் நிலையத்தில் நடைபெற்றது.
அப் பிள்ளைகளுடன் இணைந்து இப்தாரைச் சிறப்பித்தனா். இந் நிகழ்வுக்கு லேக் ஹவுஸ் தலைவா் கயான் ரத்னாயக்க, ஆசிரியா்குழு பணிப்பளா், தினகரன் பிரதம ஆசிரியா் கே. குணராசா, சன்டே ஒப்சேவா் பத்திரிகையின் ஆசிரியா் கலந்து கொண்டனா்.
இந் நிகழ்வில் அல ஸபா தலைவா் மௌலவி தாசீம் கலந்து கொண்டாா், அத்துடன் மௌலவி முபாரக் அப்துல் மஜித் கலந்து கொண்டனா் தினகரன், மற்றும் பத்திரிகை விளம்பர பீடங்களில் கடமையாற்றும் முஸ்லீம் ஊழியா்கள் ஊடகவியலாளா்கள் கலந்து கொண்டனா்.



