இக்பால் அலி-
இம்முறை பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஒரு வேட்பாளரை மட்டும் நிறுவத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க இணப்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காரஸ்கிரஸ் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தும் விடயத்தில் கருத்து முரண்பாடுகள் நிலவுகின்ற சந்தர்ப்பத்தில் குருநாகல் மாவட்டத்திலுள்ள வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷாவுக்கு மட்டும் வேட்பாளராக களமிறக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள ஒரு வேட்பாளரையோ அல்லது வேறு சிறு கட்சிகளிலுள்ள முஸ்லிம் வேட்பாளரையோ இம்மாவட்டத்தில் களமிறங்க அனுமதியளிக்கப்பட வில்லை என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில் இம்முறை குருநாகல் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்குப் பின் ஐக்கிய தேசியக் கட்சியில் ஒரு முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
