முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மாற்று கட்சி ஒன்றின் ஊடாக தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏதோ ஒரு வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது போனால், மாற்று கட்சியின் ஒன்றின் ஊடாக தேர்தலில் போட்டியிடுவதற்காக மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கி வரும் தரப்பினர் கொழும்பு விஜேராம மாவத்தை அலுவலகம் ஒன்றை திறந்துள்ளதாக கூறப்படுகிறது.
தேவை ஏற்படும் பட்சத்தில் தனித்து போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களையும் அவர்கள் தயார் செய்து வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
