இஹ்திஸாம்-
அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள்; பிரதி முதல்வர் அல்-ஹாஜ் எம்.எம்.எம்.றிஸாம் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் வைபவம் இன்று 04 ஆம் திகதி சனிக்கிழமை மாலை பிரதி முதல்வர் அல்-ஹாஜ் எம்.எம்.எம்.றிஸாம் அவர்களின் அக்கரைப்பற்று – 04 முதலியார் வீதியில் அமைந்துள்ள இல்ல வளாகத்தில் இடம் பெற்றது.
அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க் கட்சி தலைவர் அல்-ஹாஜ் எஸ்.எல்.எம்.ஹனிபா (மதனி) அவர்களின் பங்களிப்புடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஏ.எல்.தவம் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இவ் இப்தார் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான கௌரவ அல்-ஹாஜ் றஊப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததோடு, (முன்னாள்) பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பைஸால் காஸீம், மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ ஏ.எல்.தவம் மற்றும் கௌரவ ஏ.எல்.எம்.நஸீர் பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க் கட்சி தலைவர் அல்-ஹாஜ் எஸ்.எல்.எம்.ஹனிபா (மதனி), உயர் பீட உறுப்பினர்கள் உட்பட ஏராளமான ஆதரவாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மௌலவி எம்.ஐயூப் அவர்களின் சிறப்பு பயான் இடம் பெற்றது. இப்தார் நிகழ்வைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான கௌரவ அல்-ஹாஜ் றஊப் ஹக்கீம் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.





