அபூ-இன்ஷாப்-
சம்மாந்துறை ஜம்இய்யத்துல் உலமா சபை கட்டிடத்தில் அமைச்சர் ஹக்கீம். கடந்த ஜனவரி மாதம் 08ம் திகதி இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றம் உருவாக்கிய யுகப் புரட்சி பாதுகாக்கப்பட வேண்டும் விஷேடமாக முஸ்லிம்களினால் பாதுகாக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சருமான அப்துல் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சம்மாந்துறை ஜம்இய்யத்துல் உலமா சபை கட்டிடத்திற்கான நிதிகையளிக்கும் வைபவம், மற்றும் இப்தார் நிகழ்வு என்பன கடந்த சனிக்கிழமை (04) சம்மாந்தறை ஜம் இய்யத்துல் உலமாசபைக் கட்டிடத்தில் ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எம்.ஐ.அப்துல்காதர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
எதிர்வரும் திங்கட்கிழமை நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யும் தினம் ஆரம்பிக்கப்படுகின்ற சூழ்நிலையில் தேசிய அரசியலில் ஏற்படும் மாற்றத்தில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பங்களிப்பு அதன் வியூகம் அதன் தலைமைத்துவத்தினால் எவ்வாறு மெற்கொள்ளப்படவுள்ளது என்ற எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் சிறந்த தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.
அவ்வாறு நாம் எடுக்கின்ற தீர்மானத்துக்கு ஏற்ப எமது தேர்கல் களத்தையும் தயார்படுத்த வேண்டியுள்ளது. அத்துடன் எமது வியூகத்தினால் எடுக்கப்படுகின்ற முடிவுகளை எமது மக்களும் எமது சமூக பொது அமைப்புக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் அதனை எனைய அரசியல் தலைமைகள் அவதானமாக பாத்துக் கொண்டிருக்கின்றன.
கடந்த 48 மணித்தியாலத்தில் எதிர்கட்சியில் ஏற்பட்ட திடீர் முடிவு தளம்பல் விநோதங்கள் எதிர்பாக்கப்பட்ட போதிலும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஏனைய கட்சிகள் எடுக்கின்ற முடிவுகளில் அவதானத்தை செலுத்தியதனால் எமது இயக்கம் மேற்கொண்ட சாதகமான வியூகத்தினால் நேற்று எதிரணியின் முடிவு எமது இயக்கத்தின் பேரம் பேசும் சக்தியை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறான சூழ்நிலையில் சம்மாந்துறை மக்கள் இன்று மிகவும் ஆர்வமாகவும் ஆவலாகவும் இழந்து நிக்கின்ற பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்துக்கு எதிர்காலத்தில் என்ன நடைபெறப் போகின்றது என்ற எதிபார்ப்புகளுக்கு மத்தியில் காண்படுகின்றனர்.
சம்மாந்துறைப் பிரதேசம் இந்த மாவட்டத்தில் மிகப் பிரமாண்டமானதாகவும் கூடுதலான வாக்காளர்களும் இருக்கின்ற தாய் பிரதேசம் அப் பிரதேசம் கடந்த காலத்தைப் போன்று எதிர்காலத்தில் பிரதிநிதித்துவத்தை ஒருவகையிலும் இழக்காத வகையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
அவ்வாறான முடிவுகளில் மாற்றம் ஏற்படுமாயின் அதற்கான முழுப்பொறுப்பையும் தலைமைத்துவம் ஏற்றுக் கொள்வதுடன் அதற்குபகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
மர்ஹூம் அமைச்சர் அன்வர் இஸ்மாயீல் உருவாக்கிய இந்த உலமாசபைக் கட்டிடத்தக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும். இலங்கை சவூதி ஆரேபிய தூதரகத்தின் பொதுசனத் தொடர்பு அதிகாரியுமான ஐ.எல்.எம்.மாஹிர் மூலமாக மேற் கொள்ளப்பட்ட முயற்சியினால் தபால் தொலைத் தொடர்புகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீம் அவர்களினால் கட்டிட வேலைகளுக்காக 01மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளார் இதற்கு மேலதிகமாக என்னுடைய நிதியிலிருந்து இன்னும் 01 மில்லியன் ரூபா தருவதாகவும் கூறினார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், மாகாண உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும்.
இலங்கை சவூதி ஆரேபிய தூதரகத்தின் பொதுசனத் தொடர்பு அதிகாரியுமான ஐ.எல்.எம்.மாஹிர், கட்சியின் உயர் பீட உறுப்பினர் சிரேஷ;ட சட்டத்தரணி எஸ்.எம்.முஸ்தபா, பிரதேச செயலாளர்களான ஏ.மன்சூர், எம்.எம்.நஸீர், வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சகுதுல் நஜீம் உட்பட ஊர்பிரமுகர்கள் உயரதிகாரிகள் என பெரும் தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.



