நிஸ்மி-
அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக மட்ட புனர்வாழ்வு (CBR) சம்பந்தமாக அம்பாரை மேலதிக அரசாங்க அதிபர் சமூக மட்ட புனர்வாழ்வு குழுவினருடனான நேரடிக் கலந்துரையாடல், மாற்றுத் திறனாளிகளுக்கான அரசினால் வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவு வழங்கள் மற்றும் அவர்களுக்கான இப்தார் நிகழ்வு முதலிய மூன்று நிகழ்வுகள் நேற்று (03) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் வெத்தீப் (சட்டத்தரணி) தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் அம்பாரை மேலதிக அரசாங்க அதிபர் அஷ்ஷேய்க் எம்.ஐ.அமீர் அவர்கள் கலந்து கொண்டதோடு அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் அஷ்ஷேய்க் எம்.எஸ்.எம்.றஸ்ஸான், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்களான எம்.கலந்தர், எம்.ஏ.சம்சுதீன், கணக்காளர் எம்.ஐ.எம்.மூஸ்தபா, சமூக சேவை உத்தியோகத்தர்களான எம்.ஐ.அன்வர், எம்.எச்.ஷியாட், நிருவாக உத்தியோகத்தர்களான எம்.எஸ்.பாறூக், எஸ்.ரி.அன்வர் உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள், ஏராளமான மாற்றுத் திறனாளிகள் முதலியோர் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலாளரின் உரையைத் தொடர்ந்து மேலதிக அரசாங்க அதிபர் அஷ்ஷேய்க் எம்.ஐ.அமீர் சிறப்புரை நிகழ்த்தினார். பின் இப்தாரைத் தொடர்ந்து
மாற்றுத் திறனாளிகளுக்காக அரசாங்கம் மாதாந்தம் வழங்கும் 3000.00 ரூபா வாழ்வாதாரக் கொடுப்பனவின் ஜனவரி தொடக்கம் ஜுலை வரைக்கான 21,000.00 ரூபாவுக்கான காசோலைகளை மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிதிகள் வழங்கி வைத்தனர்.






