கிழக்கு மாகாண வீதிப் பயணி போக்குவரத்து அதிகார சபையின் வாழைச்சேனைக்கான புதிய பஸ்தரிப்பு நிலைய கட்டட திறப்பு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் வி.அபேவிக்ரம தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.இஸ்மாயில், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் எம்.எச்.எம்.மீராமுஹைதீன், கிழக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் உயர் அதிகாரிகள், பஸ் ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண வீதிப் பயணி போக்குவரத்து அதிகார சபையினால் கிழக்கு மாகாண நிதி மூலம் இக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு கட்டடம் இன்மையால் தாங்கள் சிரமத்திற்கு மத்தியில் சேவையாற்றி வந்ததாகவும், இனி எங்களுக்கு எந்தவித சிரமங்களும் இல்லை எனவும் பஸ் ஊழியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ந.குகதர்சன்-



