கஃபாவின் மீது போர்த்தப்படும் போர்வை பற்றி (அறிய வேண்டியவைகள்)

கஃபாவின் மீது போர்த்தப்படும் போர்வைக்கு என்ன பெயர் ?எப்போது அந்த போர்வை மாற்றப் படும் ?புது போர்வை போர்த்தப்பட்டால் பழைய போர்வையை என்ன செய்வார்கள் ?இந்த போர்வை செய்ய எவ்வளவு செலவு ஆகிறது ?அந்த போர்வை கருப்பு நிறம் மட்டும் தானா ?இது போன்ற தகவல்களும் !!

!கஃபாவின் மீது போர்தப்படும் போர்க்கு பெயர் :கஃபாவின் மீது போர்த்தப்படும் கருப்பு நிற போர்வைக்கு " கிஸ்வா " என்று பெயர் சொல்லப்படும்.

தங்க ஜரிகைகலால் ஆனது ,கஃபாவிற்க்கு போர்வை மாற்றம் வைபவம் என்றே ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறதுஎப்போது மாற்றப்படும் !!!வருடந்தோறும் துல் ஹஜ் பிறை 9 ம் நாள் ஹஜ்ஜோடு சேர்த்து இந்த போர்வையை மாற்றப்படுகிறது,பழைய போர்வை !!!பழைய போர்வை சின்னஞ்சிறு துண்டுகளாகவெட்டப் பட்டு வெளி நாட்டு நிறுவனங்களுக்கும், பிரமுகர்களுக்கும் வழங்கப்படுகிறது. 

ஆனால் கலிஃபா உமர்[ ரலியல்லாஹூ அன்ஹூ ] ஆட்சி காலத்தில்அது ஹஜ் பயணிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது.14 -மீ-நீளமும் 101-செ.மீ அகலமும் கொண்ட 47 துண்டுகள் பயன் படுத்தப்படும்.

இந்த போர்வையின் நீளம் -658 ச.மீ ஆகும் 670-கிலோ பட்டு நூலும் 15 கிலோ அசல் தங்க ஜரிகை இழைகள் பயன்படுத்தப்படுகிறது .

இதற்காக ஆகும் செலவு சவுதி ரியால் -1கோடியே 70-லட்சம் என்று சொல்லப்படுகிறது.அது இந்தியா ரூபாய் சுமார் 20-கோடியை தொடும்போர்வை நெய்யப்பட்ட பிறகு திருக் குர்ஆன் வசனங்கள் ஜரிகை இழைகளால் கலை நயமிக்க எழுத்துக்களால் அதில் பின்னப்படுகின்றன .கிஸ்வாவின் நிறம் ஒவ்வொரு ஆட்சியாளர் காலங்களில் ,ஒவ்வொரு நிறத்திலும் இருந்திருக்கிறது .ஆரம்பகாலங்களில்இந்த போர்வை மாற்றும் வைபவம். 

முஹர்ரம்-10-ஆம்நாள் நடை பெற்றது,பிறகுதான் அது துல்ஹஜ் மாதம் மாற்றப்பட்டதுமுஆவியா பின் சுப்யான் (ரலி ) ; முஹர்ரத்தின் போதும் ரமளானின் போதும் இதை மாற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள் .

பல கோத்திரத்தார்களும் தங்கள் பங்கிற்கு சிறு சிறுபோர்வைகளை போர்த்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள் .அத்துடன் ஒவ்வொரு கோத்திரத்தாரும்முறை வைத்து போர்வை போர்த்துவதை வழக்கமாககொண்டிருந்தார்கள்ஒரு முறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்களின் பாட்டி தனது பரிசாகவும் ,பங்களிப் பாகவும் வெள்ளை நிற கிஸ்வாவை கொடுத்தார்கள்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்களும் எமன் நாட்டின் துணியில் செய்யப்பட்ட வெள்ளை நிற கிஸ்வாவை ஒரு முறை போர்த்தியிருக்கிறார்கள்.ஹாரூன் அல் ரஷூத் ( ரலி )அவர்களும் இதையே பின் பற்றியிருக்கிறார்கள்.

ஆனால்உமர்(ரலி) அவர்களும் ,உஸ்மான் (ரலி ) அவர்களும் குத்பி எனப்படும் எகிப்திய வெள்ளைப் போர்வைகளை பயன் படுத்தியிருக்கிறார்கள் மக்கா அரசியலில் யார் செல்வாக்கோடு இருக்கிறார்கள் என்பதை பொறுத்து கிஸ்வாக்கள் துணி எகிப்து,ஈராக்,அல்லது எமன் என்று ஏதாவது ஒரு நாட்டிலிருந்து வந்து கொண்டிருந்தது . 

துருக்கிய சாம் ரகசியத்தை விட்டு பிரிந்த எகிப்தின்ஆளுனர் ,முஹம்மது அலி பாஷா தான்.கிஸ்வா தயாரிக்கும் பொறுப்பை எகிப்து அரசு ஏற்கும் என்று அறிவித்தார் .அதன் படபடி ஆண்டு தோறும் ஒரு ஒட்டக அணி இதனை மக்காவிற்கு சுமந்து சென்றது .கிபி 1160-க்கும ,1207-க்கும் இடையில் ஆட்சி புரிந்த நஸிர் அப்பாஸி என்பவர் பச்சை நிற கிஸ்வாவை பயன்படுத்தினார்.

பிறகு அது கருப்பாக மாற்றப்பட்டது .இன்று வரை அந்த வண்ணமே நடித்து நிலைத்து நிற்கிறது .1926-ம் ஆண்டு வரை மன்னர் இப்னு சவுர் பக்தாதில் இருந்து கிஸ்வாவை வரவழைத்து பயன் படுத்தினார் 1926-ல் தான் மன்னர் அப்துல் அஜீஸ் மக்காவிலேயே கிஸ்வாவைஉற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றைதொடங்கினார்கிஸ்வாவை பற்றிய தகவல் ; ஆரம்பத்தில்இதை தயாரிக்கும் தொழில் வல்லுனர்கள்இந்தயா விலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர் .

மரத்தினாலான தறியில் இதனை நெய்வதற்கு 100 பேர் தேவைப்பட்டனர் கால அளவும் ஏறக்குறைய ஒரு வருடம் பிடித்தது நெயவதை விட அழகிய கலை நயமிக்க ஜரிகை வேலைப்பாடுகளுக்குத்தான் அதிக காலங்கள் தேவைப்பட்டது .

இதற்கான நவீன இயந்திரங்களை கண்டுபிடிக்கும்பணி தோல்வி அடையவே வேறு வழியில்லாமல் 1937- ல் இந்த தொழிற்சாலை மூடப்பட்டது .நீண்ட 25-வருட இடைவெளிக்கு பிறகு 1962-ல் அது மீண்டும் திறக்கப்பட்டது.

ஜெர்மனினிலிருந்தும் இத்தாலியிலிருந்தும் மிக உயரஉயரந்தவகை பட்டு நூல்கள் இறக்குமதி செய்யப்பட்டு சிறந்த ஆலிவ் எண்ணைகளாலும் அழுக்கு நீக்கிகளை கொண்டும் அதிலுள்ள மெழுகுப்பசை நீக்கப்படுகிறது90 டிகிரி உஷ்ண வெயிலில் இது பல முறை கழுகப்பட்ட பிறகே அதன் இயற்கையான கருமை நிறம் கிடைக்கிறது சாயம் பயன் படுத்துவதைவிட இது நல்ல பலன் தருகிறது .

முன்பு இது கைகளால் செய்யப்பட்டு வந்தது இப்போது இதற்கென இயந்திரங்கள் வந்து விட்டதனஇன்னபிற நெய்தல் பணியும் தொடங்குகிறது,



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -