க.கிஷாந்தன்-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூறியதுபோல 1000 ரூபாய் சம்பளத்தை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுகொடுக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையில் 08.07.2015 அன்று காலை 10.30 மணிக்கு தலவாக்கலை நகரசபை மைதானத்தில் சத்தியாகிரக போராட்டம் முன்னெடுத்தனர்.
அப்போராட்டம் நண்பகல் 1 மணியளவில் நிறைவுபெற்றுள்ளது.
இப்போராட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வி.இராதாகிருஷ்ணன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.