பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகத்தின் 40வது ஆண்டு நிறைவையொட்டிய விஷேட இப்தார் நிகழ்வு இன்று(06-07-2015)மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மண்டபத்தில் கழகத்தின் தலைவர் வை.கே.றகுமான் தலைமையில் நடைபெற்றது.
இந்த இப்தார் நிகழ்வில் கழகத்தின் கலாச்சாரப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் எம்.ஐ.ஹூசைனுதீன் றியாழி இப்தார் பற்றி விஷேட உரையாற்றினார். இங்கு கழகத்தின் ஸ்தாபகரும்,கல்முனை காணி மாவட்டப் பதிவாளருமான எம்.ஏ.ஜமால் முகம்மட், கழகத்தின் போசகர்கள்,கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள். கழகங்களின் பிரதிநிதிகள் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர்.
கழகத்தின் செயலாளர் ஏ.எம்.றியாஸ், முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எம்.உவைஸ் ஆசிரியர் உள்ளீட்ட கழக உறுப்பினர்கள் இந்த இப்தார் நிகழ்வை நெறிப்படுத்தினார்கள்.



