விக்டோரியா டொன்டா பெரெஸ் (37 வயது) என்ற மேற்படி பெண் பாராளுமன்ற உறுப்பினர் புவனொஸ் அயர்ஸ் நகரிலுள்ள பாராளுமன்றக் கட்டடத்தில் இடம்பெற்ற கூட்டத் தின் போது தனது 8 மாத பெண் குழந்தைக்கு பாலூட்டியுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானதையடுத்து கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான விக்டோரியா 2007 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவானார். இதன் மூலம் ஆர்ஜென்டீன பாராளுமன்றத்திற்குத் தெரிவான மிகவும் வயது குறைந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெயரை அவர் பெற்றார்.
அது முதற்கொண்டு கவர்ச்சிகரமான பாராளுமன்ற உறுப்பினராக அவர் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார்.இந்நிலையில் பாராளுமன்றத்தில் அவர் தனது குழந்தைக்குப் பாலூட்ட எடுத்த தீர்மானம் குறித்து ஆதரவா கவும் எதிராகவும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
அவர் பாராளுமன்றத்தில் கடமையிலிருந்த போது குழந்தைக்கு தாய்ப்பாலூட்டியமை தவறான செயல் என பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவர் தனது கடமையின் மத்தியிலும் ஒரு குழந்தைக்கு தாய் என்ற ரீதியில் தனது கடமையை செவ்வனே நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கும் அவரது ஆதரவாளர்கள், எனினும் அவர் தனது குழந்தைக்குப் பாலூட்டும்போது தனது உடல் பகுதியை மறைக்கும் வகையில் ஆடையால் மூடி பாலூட்டியிருக்க லாம் என விமர்சித்துள்ளனர்.
